Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை கோதண்டராமர் கோயிலில் ... தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் கோவில் தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
01:08

பெரியபட்டினம் : சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ஆக.,8 மாலை நடந்தது. ஆக.,18 மாலை முதல் இரவு 10:00 மணி வரை மவுலீது எனும் புகழ்மாலை ஓதப்பட்டது. இரவில் பல்சுவை சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று 19ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஜலால் ஜமால் ஜும்மா பள்ளிவாசலில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் பெரிய பட்டினம் வீதிகளின் வழியாக குதிரைகள், யானை முன் செல்ல மின்னொளியில் அலங் கரிக்கப்பட்ட சந்தனக்கூடு பல்லக்கும், சந்தனப்பேழை வைக்கப்பட்ட மற்றொரு பல்லக்கும் மகான் செய்யதலி தர்காவை மூன்று முறை வலம் வந்தது.

புனித சந்தனத்தை அடக்கஸ்தலத்தில் பூசி, பச்சை போர்வையில் மல்லிகை சரம் போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று 19ம் தேதி மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை தெம்மாங்கு இசை நிகழ்ச்சி நடந்தது. தர்காவில் இருந்து மீண்டும் பள்ளிவாசலுக்கு சந்தனக்கூடு கொண்டு சேர்க்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்றனர். ஆக.,29 (வியாழக்கிழமை) அன்று மாலையில் கொடியிறக்கம் செய்யப்படும்.

சந்தனக்கூடு விழா கமிட்டி தலைவர் ஹாஜா நஜ்புதீன், விழா அமைப்பாளர் அப்துல் மஜீது, துணைத்தலைவர்கள் சிராஜுதீன், சாகுல் ஹமீது, ஹபிபுல்லா, சாகுல் ஹமீது, சுல்தான், செயலாளர் களஞ்சியம், துணை செயலாளர் ஹபிபு, சீனி ைஹதர்அலி, செய்யது இபுராம் ஷா, சாகுல் ஷமீது, ஆடிட்டர் அஸ்கர், தாஹாகான், செய்தி தொடர்பாளர் ஜாகிர் உசேன், ரை சூதீன், முகம்மது உசேன், ஆலோசகர்கள் கபீர் அம்பலம், அப்துல் ரகீம், தொழிலண அதிபர் சிங்கம் பசீர், சீனிப்பீர், இஸ்மாயில், ராஜேந்திரன், கோவிந்தன், பஞ்சவர்ணம், கார்த்திகை செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.பெரியபட்டினம் சந்தனக்கூடு விழாக்குழு, சுல்த்தானியா சங்கம், முத்தரையர் சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஊராட்சி சார்பில் மருத்துவ, பொது சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது. நள்ளிரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் ... மேலும்
 
temple news
பல்லடம்; சொத்து, பணத்தின் மீதுதான் இன்று பெரும்பாலானவர்களுக்கு ஆசை உள்ளது என, சித்தம்பலத்தில் நடந்த ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; உலக நன்மை வேண்டி திருவாரூர் பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோவில் ராசிமண்டல குரு பகவானுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar