Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் பெரியபட்டினம் சந்தனக்கூடு விழா ... சிங்க வாகனத்தில் சிம்மாசனம்: வரம் அருளும் பத்ரகாளியம்மன் சிங்க வாகனத்தில் சிம்மாசனம்: வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொன்மை இழந்த வீரசோழபுரம் சிவன் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
14:35

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கக் கூடிய வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் பரமாரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. தஞ்சை பெரியகோவில் கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் வீரசோழபுரம் சிவன்கோவிலை கட்டியதாக வரலாறு உள்ளது. தந்தை இறந்த பின் ராஜேந்திரசோழன், அவருடைய அஸ்தியை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் வழியாக வீரசோழபுரம் வந்துள்ளார். அங்கு, இரவு அஸ்தியை வைத்து விட்டு துாங்கி கண் விழித்தபோது அஸ்தி மல்லிகைப் பூவாக மாறியுள்ளது. இதனையொட்டி அவ்விடம் மல்லிகா அர்ஜூனாபுரம் என்ற பெயர் உருவானது.

கங்கை கொண்ட சோழபுரத்திற்கும், மல்லிகா அர்ஜூனாபுரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்த ராஜேந்திரசோழன் சுரங்கப்பாதை அமைத்தார். சோழ மன்னர்களின் தொடர்புகள் அதிகரித்ததால் வரலாற்றில் வீரசோழபுரம் என்ற பெயர் நிலைத்தது. அங்குள்ள சிவாலய வரலாறுபடி சிவலிங்கத்தை சித்தர்கள் பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளனர். அம்மன் சன்னதி, நான்கு நந்திகள் இருந்துள்ளன. சிவனுக்கு நகரீஸ்வரமுடைய நாயனார் என ராஜேந்திரசோழன் பெயர் சூட்டியதாக கல்வெட்டில் உள்ளது. இப்பெயர் ஏற்படுவதற்கான காரணம் குறித்து நாயன்மார்கள் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியது கல்வெட்டில் இருந்துள்ளது. அதன்படி பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது ஐதீகம்.

வரலாற்று சிறப்பு பெற்ற இக்கோவில் காலப்போக்கில் நகரீஸ்வரமுடைய நாயனார் என்ற இயற்பெயர் மருவி அர்த்தநாரீஸ்வரர், அனுதாம்பிகை என அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. சந்திரன் சிவனைப் பார்த்துதான் இருப்பார். இங்கு கிழக்கு நோக்கி சந்திரன் உள்ளதும், நவக்கிரகங்களில் கேது, தெற்கு நோக்கி இல்லாமல் மேற்கு நோக்கி இருப்பதும் தனிச்சிறப்பாகும். ராஜராஜசோழன் பரம்பரையினர் தெற்கு நோக்கி ராஜகோபுரம் கட்டுவதற்கு முற்பட்டனர். அதற்குள் ராஜகோபுரம் கட்ட முற்பட்டவர் இறந்ததால் ராஜகோபுரம் கட்டுவது இன்றளவிலும் நிறைவு பெறாமல் உள்ளது. புராதன வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவில் கடந்த பல ஆண்டுகளாக பரமாரிப்பின்றி சிதிலமடைந்து தொன்மை இழந்து காணப்படுகிறது. இருப்பினும் தற்போது ஒருகால பூஜை மட்டும் சிவனுக்கு நடந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க வீரசோழபுரம் சிவன் கோவிலை புனரமைத்து கோவிலை புதுப்பிப்பதற்கு தமிழக அரசின், இந்து அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
தஞ்சாவூர்:  தஞ்சை அருகே புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், ஆவணி திருவிழா, 74வது தெப்போற்சவம் ... மேலும்
 
temple
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 13ம் நுாற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்யும் பணி ... மேலும்
 
temple
திருநெல்வேலி: நெல்லை, கல்லிடைகுறிச்சியில் உள்ள , குலசேகரமுடையார் கோவிலில், 1982 ல் இருந்த , ஐம்பொன்னாலான ... மேலும்
 
temple
காஞ்சிபரம்: அத்தி வரதர் வைபவத்தின்போது, பெருமாளுக்கு அணிவிக்கப்பட்ட பட்டு வஸ்திரங்களுக்கு ரசீது ... மேலும்
 
temple
மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், ஐந்து ரத சிற்பங்கள் பாதுகாப்பிற்கு, கம்பி தடுப்பு அமைக்கப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.