தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதால் திருமலையில் “ரெட் அலெர்ட்” பிறப்பிக் கப்பட்டுள்ளது.
கடந்த 22ல் கோயம்புத்துாரில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பயங்கரவாதியும் இலங்கையைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளும் ஊடுருவியுள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்துார் அருகில் உள்ள காணிப்பாக்கம் விநாயகர் கோவில் மற்றும் திருமலை ஏழுமலையான் கோவி லுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள் ளது. இதனால் திருமலையில் ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரம்மோற்ஸ வம் நடந்து வருகிறது. அங்கும் திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கும் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு செல்லும் வாகனங்கள் திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனை சாவடியில் மோப்ப நாய் படை மற்றும் வெடிகுண்டு அகற்றும் படையால் சோதிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
இது குறித்து தேவஸ்தான சிறப்பு அதிகாரி தர்மா ரெட்டி கூறுகையில் “திருமலைக்கு கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத் துறை தெரிவித்து வருவதால் இங்கே 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன” என்றார்.