நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர், சி.என்.பாளையம் சொக்கநாதர், மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில்களில் நேற்று முன்தினம் 28ல், பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ நாயகர், நந்தி, ஈஸ்வரர், அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.