பதிவு செய்த நாள்
31
ஆக
2019
11:08
இளையான்குடி : இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோவிலில், மாறநாயனார் சுவாமி குருபூஜை விழா நேற்று 30ல், நடைபெற்றது.
சிவனடியார்களின் பசியைத் தீர்க்கும் பொருட்டு, அவர்களுக்கு திருவமுது செய்விப்பதையே தலையாய பணியாய் செய்து, அடியார் கோலத்தில் சோதிக்க வந்த ஈசன் மீதும் மாறாத அன்பு கொண்டு, கொடிய வறுமையிலும், உணவு படைத்த மாறநாயனாருக்கு சிவபெருமான் உமை யவளோடு, திருக்காட்சி கொடுத்த திருநாளான ஆவணி மாதம், மகம் நட்சத்திர நாளில் மாற நாயனார் குருபூஜை விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.நேற்று 30ல் காலை, கும்ப ஜெபம் மற்றும் சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்பாள் மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், மாற நாயனார் புனிதவதி அம்மையார் மூலவர் மற்றும் உற்ஸவருக்கு மகா அபிஷேகமும் நடந் தது. தொடர்ந்து, மயிலாடுதுறை சிவக்குமார் ஓதுவாரின் திருமுறை இன்னிசை நிகழ்ச் சியும், மாலையில், அரிகர தேசிக சுவாம நடத்திய ‘மனஞ்சுருங்கா மாறன்’ திருமுறை பன்னிசை மற்றும் அருளுரையும் நடந்தது. இரவு 10:00 மணிக்கு ரிஷப வாகனத்தில், சுவாமி மற்றும் மாறநாயனார் திருவீதி உலா நடைபெற்றது.