விருப்பம் நிறைவேறினால் பழம், சர்க்கரை, நாணயங்களை துலாபார நேர்ச்சையாக பக்தர்கள் கொடுப்பர். திருச்சூர் -– எர்ணாகுளம் சாலையில் 13 கி.மீ., தூரத்தில் உள்ள திருக்கூர் மகாதேவர் கோயிலில், தேங்காய் நாரினால் ஆன கயிறை பக்தர்கள் கொடுக்கின்றனர். ஆஸ்துமா, மூச்சுத்திணறல் நோயில் இருந்து குணமடைந்தவர்கள் இந்த நேர்ச்சையை செய்கின்றனர். அத்துடன் ஒரு சிறு கயிறை கோயில் மண்டபத்தில் கட்டுகின்றனர்.