தெலுங்கில் ’மொல்லா’ என்னும் பெண் புலவர் எழுதியது மொல்லா ராமாயணம். ’மொல்லா’ என்றால் ’முல்லைப்பூ’.
கிருஷ்ண தேவராயரின் அவையில் அரங்கேற்றப்பட்ட இதில், வால்மீகி சொல்லாத தகவல் ஒன்று உள்ளது.
கங்கை நதியில் இருந்த ஓடக்காரனான குகனிடம், கங்கையைக் கடக்க உதவும்படி வேண்டினார் ராமர். அதைக் கேட்ட குகனுக்கு பயம் ஏற்பட்டது. “சுவாமி....தங்களின் பாதத் தூசு பட்டால் கல்லும் கூட அழகிய பெண்ணாகி விடுமே! என் படகும் அதுபோல பெண்ணாகி விட்டால் நான் பிழைப்புக்கு என்ன செய்வேன்? அதனால் தங்களின் பாதத்தில் சிறு தூசு கூட இல்லாமல், கங்கை நீரால் கழுவுங்கள்” என்றான். ராமரும் கங்கையாற்றில் கால்களைக் கழுவிய பிறகே படகில் ஏறினார்.