ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில் மாசி மகம் பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
முன்னதாக யாகசாலை வேள்வி முடிந்தவுடன் கொடி மரத்திற்கு வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது.
சொக்கர், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர். 10 நாட்கள் நடக்கும் விழாவின்போது சுவாமி அம்பாள் அன்னம், மயில், ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பிப்.27 ல் திருக்கல்யாணம்,பிப்.28 ல், தெப்போற்ஸவம் மார்ச் 1ல் தேரோட்டமும் நடைபெறும். ஏற்பாடுகளை ராம்கோ குரூப் நிறுவனங்கள் செய்தனர்.