புன்செய்புளியம்பட்டி கோவில் வளாகத்தில் ’நட்சத்திர மரங்கள்’
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2019 02:09
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை சேர்ந்த, ட்ரீ அறக்கட்டளை சார்பில், திருப்பூர் மாவட்டம், சேவூர், அங்காளம்மன் மற்றும் அனுமந்தராயன் கோவில் வளாகத்தில், 27 நட்சத் திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நேற்று 3ம் தேதி நடப்பட்டன. கால்நடைகளால் பாதிக்காத வகையில், மூங்கில் கூண்டும் அமைக்கப்பட்டது. பொது இடங்களில், ஐந்து ஆண்டுகளாக, மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வரும், ட்ரீ அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் கூறுகையில், ’மரக்கன்று வைத்து, பராமரிக்க விருப்பமுள்ளவர்கள், 95789 03141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.