சென்னை: 1982-ல்ஆஸி.,க்கு கடத்தப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள பஞ்சலோக நடராஜர் சிலை மீட்கப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. சிலைக்கு மேளதாளங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சிக்கு எடுத்து செல்லப் படுகிறது. சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டுவந்தனர்.