சாத்துார்:சாத்துார் பசும்பொன் நகர் ஸ்ரீஐஸ்வர்ய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.
அண்ணாநகர் மறவர் மகாஜன சங்கம் தலைவர் சமுத்திரம் முன்னிலை வகித்தார். மூன்று கால யாகசாலை பூஜை நடந்தது. பட்டர்கள் கோபுரகலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. மாநில ஜெ., பேரவை துணைச்செயலாளர் சேது ராமானுஜம், நகரச் செயலாளளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி கலந்து கொண்டனர்.