பதிவு செய்த நாள்
13
செப்
2019
02:09
வடமதுரை:வடமதுரை தும்மலக்குண்டில் குளத்துக்கரை சப்தகன்னிமார், சப்தபொந்து கன்னி மார், சிவலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்றுமுன்தினம் (செப்., 11ல்) மாலை தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று 12ம் தேதி காலை 2ம் யாக பூஜைகள் முடிந்ததும், கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
சவுந்தரராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் தேவராஜ் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். பரமசிவம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, ஊர் நாட்டாண்மை பன்னீர்செல்வம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் லட்சுமணன், நகர செயலாளர் பாலசுப்பிரமணி, பக்தர்கள் பங்கேற்றனர்.