புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சிறப்பு அன்னதானம் நாளை வழங்கப்படுகிறது.
புதுச்சேரி அடுத்த பஞ்சவடீயில். ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு, புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று, சிறப்பு அன்னதானம் வழங்குவதற்கு சேவா மற்றும் சாரிட்டபிள் டிரஸ்ட் ஏற்பாடு செய்துள்ளது.புரட்டாசி முதல் சனிக்கிழமையான நாளை (21ம் தேதி) காலை 11:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, நுனிவாழை இலையில் வடை, பாயாசத்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.ஸ்ரீவாரி வேங்கடாசலபதி சுவாமியின் அன்னதான பிரசாதத்தில் கலந்து கொண்டு பெருமாளின் அருளை பெறுமாறு, டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலாளர் நரசிம்மன், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாக அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளனர்.