பதிவு செய்த நாள்
01
அக்
2019
01:10
திருவொற்றியூர்: திருவெற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில், நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது.திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி - வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், நவராத்திரி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.இந்தாண்டு, நவராத்திரி திருவிழா, நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றத்துடன் துவங்கியது. கயிலாய வாத்தியங்கள், வேத மந்திரங்கள், முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.கொடியேற்றத்தை முன்னிட்டு, உற்சவ தாயார், தபசு அலங்காரத்தில் மண்டபத்தில் எழுந்தருளினார். விசஷே பூஜைகள், ஹோமங்கள் நடைபெற்றன.அப்போது, கூடியிருந்த பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி என, விண்ணதிர முழுங்கினார்.அதை தொடர்ந்து, அம்மன் மாட வீதி உலா நடைபெற்றது. வரும், 8ம் தேதி, கொடி இறக்கத்துடன் நவராத்திரி திருவிழா நிறைவுறும்.