பாம்புகளின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான தாமிரபரணியில் நீராடி மகாவிஷ்ணுவை நோக்கி தவமிருக்கும்படி உபதேசித்தார். தன் இருப்பிடமான விந்தியமலையில் இருந்து புறப்பட்டு தாமிரபரணி கரையோரத்தில் தவம் செய்தான். மகாவிஷ்ணுவும் காட்சியளித்து ஞானம் அளித்தார். அந்த இடமே திருநெல் வேலிக்கு அருகிலுள்ள ’கோடக நல்லூர்’. இங்கு சுவாமிக்கு பெரியபிரான் என்பது திருநாமம். இவரை தரிசித்தால் ராகு, கேது தோஷம் விலகும்.