‘ஓம்’ என்பது பிரணவ மந்திரமாகும். பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் ஒலி வடிவமே(நாத தத்துவம்) இம்மந்திரமாகும். கடலலை எழுப்பும் ஓசையும், சங்கில் எழும் நாதமும் பிரணவம் என்பர். பர்வத ராஜகுமாரியான பார்வதிக்குரிய திருநாமங்களில் ‘உமா’ என்பது உயர்வானது. இதனையே ‘சக்தி பிரணவம்’ என்று சொல்வர். சக்தி என்பதற்கு ஆற்றல் என்பது பொருள். அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையே ‘ஓம்’ என்பதுபோல, உமா’ என்னும் மந்திரத்திலும் இந்த எழுத்துக்கள் உள்ளன. தேவிக்குரிய மூலமந்திரம்‘ஓம் உமாதேவ்யை நமஹ’ என்பதாகும்.