பதிவு செய்த நாள்
10
அக்
2019
02:10
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், 10 நாட்கள் நடந்த தசரா விழா, கோலாகலமாக, நேற்று 9ம் தேதி நிறைவடைந்தது.
செங்கல்பட்டில், நவராத்திரியை ஒட்டி நடைபெறும், 10 நாள் தசரா விழா, செப்டம்பர், 29ம் தேதி துவங்கியது.தினமும், ஆதிபராசக்தி அம்மன், கருமாரியம்மன், மீனாட்சியம்மன், பரமேஸ் வரி, சரஸ்வதி அலங்கரிக்கப்பட்டு, அண்ணா சாலை, பஜார், மேட்டுத்தெரு உள்ளிட்ட பகுதி களில், வீதியுலா நடைபெற்றது.இதன் இறுதி நாளான நேற்று 9ம் தேதி, மகிஷா சுரமர்த்தினி அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்றார்.
முன்னதாக, முன்தினம் நள்ளிரவு, 12:30 மணிக்கு, மேள தாளங்கள் ஒலிக்க புறப்பட்ட அம்மன் வீதியுலா, முக்கிய வீதிகள் வழியாக, அறிஞர் அண்ணா நகராட்சி மேல்நிலைப் பள்ளி அருகே, நேற்று 9ம் தேதி காலை, 9:30 மணிக்கு நிறைவடைந்தது.பின், சூரசம்ஹாரத்தின்போது, வாழை மரம் மற்றும் வன்னி மரத்தில், அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் இன்றி, பல்வேறு இடங்களிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.விழா துவங்கிய நாளிலிருந்து, நேற்று 9ம் தேதி வரை, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.