வீரபாண்டி: பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபி?ஷக மண்டல பூஜை, நேற்று பால்குட ஊர்வலத்துடன் நிறைவடைந்தது. ஆட்டையாம்பட்டி அருகே, ராஜாபாளையம் பஞ்சாயத்து பெத்தாம்பட்டி சக்தி விநாயகர், பெரிய மாரியம்மன், மேச்சேரி அம்மன், கருங்காளியம்மன் மற்றும் கடகடப்பான் கோவில்களின் கும்பாபி?ஷக விழா கடந்த செப்., 16ல் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நடந்து வந்தது.
24ம் நாளான நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி நேற்று காலை, 10:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக வந்து மாரியம்மன் கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜை நிறைவையொட்டி, சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது. அதில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் மற்றும் பக்தர்கள் எடுத்து வந்த பால், மங்கள பொருட்களால் மூலவர் அம்மனுக்கு அபி ?ஷகம் செய்யப்பட்டது. ஆட்டையாம்பட்டி, பெத்தாம்பட்டி, ராஜாபாளைம், வீரபாண்டி பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.