Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயலில் ... மயிலாடுதுறை கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கர்நாடக இசையில் புதுமைகளைப் புகுத்திய செம்பை
எழுத்தின் அளவு:
கர்நாடக இசையில் புதுமைகளைப் புகுத்திய செம்பை

பதிவு செய்த நாள்

13 அக்
2019
04:10

கடந்த, 1974 அக்., 16. கேரளா, பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் சுந்தரய்யர் சாலையிலுள்ள ஒளப்பமன்ன வீடு. நவராத்திரியை ஒட்டி, அன்று, பூழிக்குன்னம் கிருஷ்ணன் கோவிலில், செம்பை வைத்தியநாத பாகவதரின் சங்கீதக் கச்சேரி. மாலை, மூன்றரை மணி நேரம் தொடர்ந்தது, செம்பை பாகவதரின் அற்புதக் கச்சேரி மழை. கச்சேரி முடிந்தபின் கோவில் சன்னிதியில், குருவாயூரப்பா... எனக்கு, 79 வயதாகி விட்டது. வாழ்க்கையில் எல்லா ஆசைகளும் நிறைவேறி விட்டன. உருண்டு பெருத்த என்னுடல் தளர்கிறது. தாமதிக்காமல் என்னையும் அங்கு அழைத்திட வேண்டும் என, பாகவதர் வேண்டினார். கேட்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சங்கீத பாரம்பரியம்: மேள வித்வான் ராம மாரார், பாகவதர் எங்களுக்காக இனியும் நுாறாண்டு வாழ வேண்டும் என்றார்.ராமா, இது எனக்கும் குருவாயூரப்பனுக்கும் இடையேயான விஷயம். இதில் யாரும் தலையிட வேண்டாம் என்றார் பாகவதர். கோவிலில் இருந்து பல்லக்கில், ஒளப்ப மன்ன வீட்டிற்கு, பாகவதர் வந்தார். உடல் வியர்த்திருந்தது.டாக்டரை அழைத்து வருவதற்குள், பாகவதரின் உடல் சலனமற்று இருந்தது. கர்நாடக சங்கீதத்தின் குயில் நாதம் மவுனமானது. அந்த குயில் நாதத்தின் இசை பாதையை திரும்பி பார்ப்போம்.அனந்த பாகவதர், பார்வதி அம்மாளுக்கு, 1897ல் செம்பை வைத்தியநாத பாகவதர் பிறந்தார். அனந்த பாகவதர் உட்பட, நான்கு தலைமுறையினர், புகழ் பெற்ற சங்கீத வித்வான்களாக திகழ்ந்தனர். ஐந்தாம் தலைமுறையான, செம்பை வைத்தியநாத பாகவதர் காலம் வரை, 350 ஆண்டுகள் சங்கீத பாரம்பரியம் உடைய குடும்பம் அது.

பக்திச்சுவை: தந்தை அனந்த பாகவதரிடம், வைத்தியநாத பாகவதர், அவரது தம்பி சுப்பிரமணியன் இசை பயின்றனர். இசைக் கலைஞர், ராமாயணம் நடேச சாஸ்திரிகள், ஹரிகதை நிகழ்த்த பாலக்காடு வந்தபோது, செம்பை சகோதரர்களின் பாடும் திறமையை அறிந்து, செம்பைக்குவந்தார்.தமிழகத்தில் இசைக்கு இருக்கும் வாய்ப்பை, அனந்த பாகவதரிடம் விளக்கி, செம்பை சகோதரர்களை, தமிழகத்திற்கு அழைத்து வந்தார்.நடேச சாஸ்திரிகள் ஹரிகதை சொல்லும் மேடைகளில், செம்பை சகோதரர்கள் பக்திச்சுவை சொட்ட பாடும் கீர்த்தனைகள், இசைப் பிரியர்களுக்கு இன்பம் அளித்தது. தமிழகத்தில் இவர்களின் புகழ் பரவியது.புகழ் பெற்ற இசைக் கலைஞர்களான மகாராஜபுரம் விஸ்வநாத பாகவதர், அரியக்குடி ராமானுஜம் ஐயங்கார், முசிறி சுப்பிரமணி ஐயர், ஜி.என்.பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர், டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி கொடிகட்டிப் பறந்த காலத்தில்தான், செம்பை வைத்தியநாத பாகவதரின் தமிழக வரவு இருந்தது. இவர்களுக்கிடையில், முன்னணிப் பாடகராக செம்பை மாறினார். கர்நாடக இசையில், புதுமைகளைப் புகுத்தினார். செம்பையின் புகழ், நாடு முழுவதும் பரவியது.

எல்லோருக்கும் சங்கீதம்: செம்பை அக்ரஹாரத்தில், 1930ல் குருகுலம் துவக்கப்பட்டது. சங்கீதம் பயில மாணவர்கள் சேர்ந்தனர். இலவசக் கல்வி, உணவு, உறைவிடம் வழங்கப்பட்டது.செம்பை, 1940ல் சென்னைக்கு குடிபெயர்ந்தார். சென்னை சாந்தோமில் தங்கியபோது, டி.வி.கோபால கிருஷ்ணன், கே.ஜெ. ஜேசுதாஸ் போன்றோர் செம்பையின் சிஷ்யர்களானது இங்கு தான்.செம்பை மறைந்த பின்னும், கர்நாடக சங்கீத உலகில், ஒரு யுகப் புருஷனாக நிறைந்து நினைவில் நிற்கிறார். இந்தியாவில், 15 நாட்கள் நடக்கும் சங்கீத உற்சவம், செம்பை சங்கீத உற்சவமே. குருவாயூரில் நடக்கும் இவ்விழாவில், 3,000க்கும் மேல் பாடகர்கள் பங்கேற்கின்றனர்.இது, அவரது காலத்தில் வாழ்ந்த யாருக்கும் கிடைக்காத அங்கீகாரம். கர்நாடக சங்கீத உலகிற்கு செம்பையின் பங்களிப்பை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். * செம்பை வைத்தியநாத பாகவதர் மறைந்து அக்டோபர் 16ல், 45 ஆண்டுகள் நிறைவடைகிறது.

கீழத்துார் முருகன்
செயலர், செம்பை
வித்யா பீடம், கோட்டாயி, பாலக்காடு மாவட்டம்,
கேரளா. 80865 87418

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar