Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) பிள்ளைகளால் பெருமை விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » ஆனி ராசிபலன் (15.6.2020 முதல் 15.7.2020 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) போட்டியில் வெற்றி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
16:11

சுக்கிரன் அக்.28 வரையிலும், செவ்வாய் நவ.12க்கு பிறகும் நன்மை கொடுப்பர். சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். எடுத்த முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளத்தில் குறை இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கையில் பணம் புழங்கும்.  சொந்தபந்தங்களின் வருகை இருக்கும்.

சூரியனால் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். நவ.12க்கு பிறகு வீண்பயம் நீங்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். சனிபகவானால் அக்கம் பக்கத்தினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ராகுவால் வெளியூரில் தங்கும் சூழல் ஏற்படும். சிலர் தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர்.

பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தினரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி காண்பர். சுய தொழில் புரியும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.  மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் வீடு திரும்புவர்.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். தொழிலில் இருந்த தடைகள் மறையும். லாபம் அதிகரிக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். தரகு,கமிஷன் தொழிலில் மாத முற்பகுதியில் பண வரவு உயரும்.
அரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகள் படிப்படியாக  நிறைவேறும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
தனியார் துறை பணியாளர்களுக்கு விண்ணப்பித்த கடனுதவி எளிதில் கிடைக்கும்.
ஐ.டி., துறையினர் மாத முற்பகுதியில் திறமைக்கு ஏற்ற சலுகையும்,  நற்பெயரும் கிடைக்கும்.
வக்கீல்கள் தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். மறைமுகப் போட்டி குறையும்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் நவ.12க்கு பிறகு பணியிடத்தில் செல்வாக்குடன் திகழ்வர். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
அரசியல்வாதிகளுக்கு நவ.12க்கு பிறகு முயற்சியில் இருந்த தடை மறையும். எதிர்பார்த்த பதவியும் கிடைக்கும்.  
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் வளர்ச்சிக்கு வழிகாண்பர்.
விவசாயிகள் உழைப்புக்கேற்ற வருமானம் காண்பர். நெல், சோளம், கேழ்வரகு, பாசிப்பயறு போன்ற பயிர்களில் அதிக லாபம் கிடைக்கும்.
பால்பண்ணை தொழில் சிறக்கும். கால்நடை செல்வம் பெருகும்.
பள்ளி மாணவர்கள் தொடர்ந்து முன்னேறுவர். போட்டியில் வெற்றி காண்பர்.
கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

தொழிலதிபர்கள் சக தொழிலதிபர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புண்டு.
வியாபாரிகள் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக பயணம் அடிக்கடி செல்வர்.
அரசு பணியாளர்கள் சக ஊழியர்களால் பணிச்சுமைக்கு ஆளாகலாம் கவனம்.
நெருப்பு, மின்சாரம் தொடர்பான பணியாளர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது.
ஐ.டி., துறையினர்களுக்கு அக்.28 க்கு பிறகு இடமாற்றம் வர வாய்ப்புண்டு. கோரிக்கை நிறைவேற விடாமுயற்சி தேவைப்படும்.
மருத்துவர்களுக்கு சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் ஏற்படலாம். சிலர் வீண் அலைச்சலைச் சந்திப்பர்.
ஆசிரியர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிப்பது நல்லதல்ல.
அரசியல்வாதிகள் மாத பிற்பகுதியில் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும்.  
கலைஞர்கள் அக்.28க்கு பிறகு நட்பு விஷயத்தில் கவனம் செலுத்தவும். எதிரிகளால் தொல்லை வரலாம். முயற்சிகளில் தோல்வியை சந்திக்கலாம்.  
கல்லூரி மாணவர்கள் அக்கறையுடன் படிக்கவும். ஆசிரியர்களின் அறிவுரையை பின்பற்றவும்.

* நல்ல நாள்: அக். 18,19, 20,26,27,28,29, நவ.1,2, 6,7,13,14,15,16
* கவன நாள்: அக்.21,22,23 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 1,9
* நிறம்: பச்சை, சிவப்பு

* பரிகாரம்
●  வியாழனன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு
●  வெள்ளியன்று நாக தேவதைக்கு நெய்தீபம்
●  சுவாதியன்று லட்சுமி நரசிம்மர் தரிசனம்

 
மேலும் ஆனி ராசிபலன் (15.6.2020 முதல் 15.7.2020 வரை) »
temple
இந்த மாதம் கூடுதல் நற்பலனை எதிர்பார்க்கலாம் காரணம் சூரியன் சாதகமான இடத்திற்கு வந்துள்ளார். முக்கிய ... மேலும்
 
temple
முக்கிய கிரகங்களில் சுக்கிரன் மாதம் முழுவதும் நன்மை தருவார். செவ்வாய் ஜூன் 18ல் கும்பராசியில் இருந்து ... மேலும்
 
temple
இம்மாதம் குரு ஜூலை7க்கு பிறகு நற்பலனை வாரி வழங்குவார். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் ... மேலும்
 
temple
இந்த மாதம் சுக்கிரன், சனி, கேது நன்மை தர காத்திருக்கின்றனர். புதன் ஜூன் 21 - ஜூலை 3 வரை நற்பலன் கொடுப்பார். ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசிக்கு 11ல் இணைந்து இருக்கும் புதன், சூரியன், ராகு  நன்மை தருவார்கள்.  எனவே இது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.