பதிவு செய்த நாள்
25
அக்
2019
11:10
பழநி: பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கையில், 29 நாட்களில் ரூ. 2 கோடியே 60 லட்சத்து 91 ஆயிரம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன் கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில், தங்கம்-747 கிராம், வெள்ளி-11,360 கிராம், வெளிநாட்டுகரன்சி- 580,ரொக்கமாக ரூ. 2 கோடியே 60லட்சத்து 91 ஆயிரத்து 30 கிடைத்துள்ளது. தங்கம், வெள்ளியிலான கொலுசு, வேல், தாலி, பாதம், மோதிரம் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் அனிதா, முதுநிலை கணக்கீட்டாளர் மாணிக்கவேல்,மேலாளர் சேகர் பங்கேற்றனர்.-