செஞ்சி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பதிவு செய்த நாள்
26
அக் 2019 12:10
செஞ்சி: செஞ்சி, கண்டாச்சிபுரம், மயிலம், திருவக்கரை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி அடுத்த செத்தவரை மோன சித்தர் ஆசிரமத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனாகிய சொக்கநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதை முன்னிட்டு சிவஜோதி மோன சித்தர் தலைமையில் கோபூஜை, சொக்கநாதர் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. 6:00 மணிக்கு சுவாமி கோவில் உலா நடந்தது. இதேபோன்று, செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மனுக்கு அபிஷேக அலங்காரமும், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனையும் நடந்தது. மேலும், பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வரர் கோவில், சந்தைமேடு காசி விசுவநாதர் கோவில், முக்குணம் முக்குன்றநாதர் கோவில், நெகனுார் பொன்னிபுரீஸ்வர் கோவில்களில் உள்ள நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவில், திருவக்கரையில் சந்திர மவுலீஸ்வரர் கோவில், மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி சமேத எமதண்டீஸ்வர் கோவில், மயிலம் சுந்தர விநாயகர் கோவில், ரெட்டணை, பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், செண்டூர், ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு வழிபாடு நடந்தது.
|