பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
பொங்கலுார்:பொங்கலுார் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில் இன்று 28ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்குகிறது.விழாவையொட்டி இன்று 28ம் தேதி காலை, 7: 15 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது.
தொடர்ந்து அலகு மலை அடிவாரம் முத்து திருமண மண்டபத்தில், பக்தர்கள் கங்கணம் அணி ந்து, சஷ்டி விரதம் துவங்குகின்றனர்.நாளை, 29ம் தேதி செவ்வாய்க்கிழமை, 7:00 மணிக்கு கந்தர்சஷ்டி கவசம் பாராயணம், 8:15 மணிக்கு ஆலய தரிசனம், 11:00 மணிக்கு ஆசிரமத்தில் வேலுக்கு அபிஷேகம், பூஜை, மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை, மாலை, 4:00 மணி யளவில் பஜனை, கந்தர்சஷ்டி பாராயணம், 5:45 மணிக்கு சத்சங்கம், பஜனை, கூட்டுப் பிரார் த்தனை நடக்கிறது.
நவ., 2ம் தேதி மதியம், 2:30 மணிக்கு முருகப்பெருமான் தன் தாய் பத்மாவதி தேவியிடமிருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சி, மாலை, 5:00 மணிக்கு, கந்தர் சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ் வான சூர சம்காரம் நடக்கிறது. 6:30 மணிக்கு ஆசிரமத்தில் பக்தர்கள் கங்கணம் அவிழ்த்து விரதம் முடிக்கின்றனர்.வரும், 3ம் தேதி காலை, 10:30 மணிக்கு திருக்கல்யாணம், திருக்கல் யாண விருந்து ஆகியன நடக்கிறது. விரதம் இருக்கும் பக்தர்கள் தொடர்ந்து ஆறு நாட்களும் அலகுமலை முத்து திருமண மண்டபத்தில் தங்கி இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழா குழுவினர் செய்துள்ளனர்.