கீழக்கரை: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய 2 வயது சிறுவன் சுர்ஜித் நலமுடன் மீண்டும் திரும்பிட வேண்டி ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. ஆலீம்கள்செய்யது இப்ராகீம், சர்தார் சுல்தான், செய்யது அபுதாகீர் தலைமையில் சிறப்பு துஆ ஓதப்பட்டது. ஏற்பாடு களை ஏர்வாடி தர்கா ஹக்தார் பொது மகா சபை நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர். யாத்ரீகர்கள், மக்கள் திரளாக பங்கேற்றனர்.