பதிவு செய்த நாள்
28
அக்
2019
02:10
புதுச்சேரி : மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில், குருபெயர்ச்சி விழா இன்று துவங்குகிறது. குரு பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கும் குரு பெயர்ச்சி விழா, நாளை 29ம் தேதி அதிகாலை 3.18 மணிக்கு நடக்கிறது. அதையொட்டி, புதுச்சேரி - திண்டிவனம் சாலை, மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவான் கோவிலில், குரு பெயர்ச்சி மஹாயாகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று 28ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன்குரு பெயர்ச்சி பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம், 1008 கொழுக்கட்டை நிவேத்தியமும், மாலையில் நெய், பால், தயிர், தேன், இளநீர், விபூதி, பன்னீர் என 30 வகையான பொருட்கள் கொண்டு அபிேஷகங்கள் நடத்தப்படுகிறது.குரு பெயர்ச்சி தினமான நாளை 29ம் தேதி அதிகாலை முதல் சிறப்பு ஹோமங்கள் துவங்குகிறது. குரு சாந்தி ஹோமம், நவக்கிரக சாந்தி ஹோமம், நட்சத்திர ஹோமம், ராசி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், ராசி பரிகார ஹோமம் நடக்கிறது.விழாவில், குரு பகவானுக்கு யானை வாகனத்துடன் கூடிய பஞ்சலோக கவசம் அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, அன்னதானமும், குரு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிேஷகம் நடக்கிறது.ஏற்பாடுகளை சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் செய்து வருகின்றனர்.