பதிவு செய்த நாள்
11
நவ
2019
02:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில், 25 அடி உயர முத்துமாரியம் மனுக்கு, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் பகுதியில், 25 அடி உயரமுள்ள முத்துமாரியம்மன் சிலைக்கு நேற்று 9ம் தேதி, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன் தினம் 8ம் தேதி காலை மங்கள இசையுடன் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாக சாலை பூஜை, லஷ்மி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து நேற்று 9ம் தேதி, மூன்றாம் கால யாகசால பூஜை, சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து மேள தாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலசநீர் எடுத்து செல்லப்பட்டு, 25 அடி உயர முத்து மாரியம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.