விருத்தாசலம்:விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் நடந்த அன்னாபிஷேகத்தில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள ஏகநாயகர் கோவிலில், நேற்று (நவம்., 11ல்) காலை 9:00 மணியளவில், விக்னேஸ்வர பூஜை, கலச பூஜை, மகா அபிஷேகம் நடந்தது.
பிற்பகல் 12:00 மணியளவில் அன்னம் சாற்றும் நிகழ்ச்சி துவங்கியது. இரவு 7:00 மணியளவில் அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்த ஏகநாயகருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சாற்றிய அன்னம், பிரசாதமாக வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர்.