வால்பாறை:வால்பாறை நகரில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு நாளை (12 ம் தேதி) மாலை, 3;00 மணிக்கு அன்னாபிஷேகவிழா நடக்கிறது.
இதனையடுத்து, 3:15 மணிக்கு கணபதி ஹோமம், 5:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 5:30 மணி க்கு அன்னாபிஷேகம், மாலை, 6;00 மணிக்கு மகாதீபாரா தணை நடக்கிறது. மேற்கண்ட தகவலை கோவில் பிரதோஷபூஜை வழிபாடு குழுவினர் தெரிவித்துள்ளனர்.