ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி மடவார் வளாகம் கோயிலில் நேற்று (நவம். 12ல்) காலை 7:00 மணிக்கு வைத்தியநாதசுவாமிக்கு கும்பம் வைத்து ஹோமம் செய்ய 2 மூடை அரிசியில் அன்னாபி ஷேகம் செய்து சிவசகஸ்வர நாம அர்ச்சனையை ரகுபட்டர் செய்தார். ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானமும் நடந்தது.
விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கும், நந்திக்கும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
ராஜபாளையம்: ராஜபாளையம் மாயூரநாதசுவாமிக்கு அன்னாபிஷேகம் சாத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பல்வேறு வகையான அபிஷேகங்கள் முடிந்து அலங்காரத்தில் காட்சியளி த்தார். அம்பலப்புலி பஜார் கருப்பஞானியார் ஜீவ சமாது கோயிலில் கருப் பஞானியார், பொன்னப்பஞானியாருக்கு அன்னாபிஷேகம், காய்கறிகள் பழங்களால் அலங்காரமும் நடந்தது. தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய நாதரும் அன்னாபிஷேகத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.