பதிவு செய்த நாள்
13
நவ
2019
02:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சின்னநெகமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, பூவோடு எடுத்தலுடன் துவங்கியது. சின்னநெகமம் மட்டுமல்லாது நெகமம், அய்யம்புதூர், சின்னேரிபாளையம், காளியப்பம்பாளையம், ரங்கம்புதூர், உதவிபாளையம் ஆகிய கிராமங்களில் கொண்டாடப்படுகிறது.நேற்று முன்தினம், (நவம்., 11ல்)கொங்கு கும்மியாட்டம் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று, 13ம் தேதி, காலை மாவிளக்கு ஊர்வலம், திருக்கல் யாணம், அக்னிசட்டி ஊர்வலம், அலகு குத்தும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில், ஏழு கிராம மக்களும் பங்கேற்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு, கிராமங்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.