சென்னை: சபரிமலைக்கு செல்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும், என பாடகர் ஜேசுதாஸ் கேட்டுக் கொண்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கடந்த ஆண்டு அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. பின் சீராய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு வழக்கை மாற்றியது.
இது குறித்து சென்னையில் பாடகர் ஜேசுதாஸ் கூறுகையில், சபரிமலை ஐயப்பனைக் காண அனைவரும் செல்லலாம். அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கக் கூடாது. பெண்கள் சபரிமலைக்கு வந்தால் ஐயப்பனை ஒன்றும் செய்யாது. ஆனால் விரதம் இருந்து வரும் பக்தர்களின் கவனத்தை திசை திருப்பும். முன்பு ஐயப்பனுக்கு மாலை அணிந்தவர்கள், அவர்கள் வீட்டில் உள்ள பெண்களை கூட பார்க்க மாட்டார்கள். தற்போது காலம் மாறிவிட்டது. கொஞ்சம் நல்ல அழகான பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் கெடுதலை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே, சபரிமலைக்கு பெண்கள் செல்ல வேண்டாம். வேறு கோயில்களுக்கு செல்லலாம், என்றார்.