பதிவு செய்த நாள்
17
ஜன
2020
12:01
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீட தைப்பூச விழாவில் பங்கேற்க, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத் துணைத் தலைவர் கோ.ப., செந்தில்குமார், அழைப்பு கொடுத்தார். மேல்மருவத்துார், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், தைப்பூச விழா, கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டு, தைப்பூச விழா, பிப்., 8ம் தேதி, நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, தெலுங்கானா மாநில கவர்னர் அலுவலகத்தில், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து, சித்தர் பீடம் சார்பில், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர் கோ.ப., செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள், நேற்றுமுன்தினம், அழைப்பு கொடுத்தனர்.