ராமேஸ்வரம் கோயிலில் குடிநீர் வீணடிப்பு: பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2020 03:02
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் டைல்ஸ் கற்களை சுத்திகரித்த குடிநீரில் சுத்தம் செய்து குடி நீரை வீணாகியதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் 20 ஆயிரம் வட, தென் மாநில பக்தர்கள் புனித நீராடுகின்றனர்.
இவர்களில் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு குடிநீர் இன்றி தாகத்தில் தவித்தனர். இதனை தவிர்க்க ஓராண்டிற்கு முன்பு கோயில் நிர்வாகம் 2ம் பிரகாரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் குழாய் அமைத்தது. இங்கு நீராட வரும் பக்தர்கள் இக்குடிநீரை பருகி தாகம் தணித்தனர். இந்நிலையில் நேற்று கோயில் 2ம் பிரகாரம் தரை தளத்தில் அழுக்கு படிந்த டைல்ஸ் கற்களை, சுத்திகரித்து குடிநீர் குழாயில் பைப் இணைத்து இரண்டு மணி நேரம் சுத்தம் செய்தனர். அப்போது குழாயில் இருந்து பல நுாறு லிட்டர் குடிநீர் கசிந்தும், பல ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்தம் செய்து வீணாக்கினர்.இனிவரும் கோடையில் குடி நீர் வறண்டு போகும் நிலையில், பல ஆயிரம் சுத்தமான குடி நீரை வீணாக்கியதற்கு எதிர்ப்பு, சம்பந்தப்பட்ட ஊழியர்களின் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் தெரிவித்தனர்.