கொல்லம் - எர்ணாகுளம் வழியில் திருவல்லா உள்ளது. 108 திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இது ‘திருவல்லவாழ்’ எனப்படுகிறது. இத்தல பெருமாளை வழிபடும் பக்தை ஒருத்தி சங்கர மங்கலம் என்னும் கிராமத்தில் இருந்தாள். அவள் ஏகாதசியன்று விரதமிருந்து, மறுநாள் துவாதசியன்று பிரம்மச்சாரி ஒருவருக்கு உணவிடுவாள். ஒருமுறை பெருமாளே பிரம்மச்சாரியாக வந்தார். அவருக்கு பாக்கு மரத்தின் பாளையில் அன்னமும், உப்பு மாங்காயும் இட்டாள். அவளுக்குத் தன் சுயரூபத்தை காட்டி அருள்புரிந்தார் பெருமாள். அவள் நினைவாக இங்கு துவாதசியன்று பெருமாளுக்கு பாக்குமர பாளையில் அன்னமும், மாவடுவும் நைவேத்யம் செய்யப்படுகிறது.