ஆற்றில் இறங்க அழகர் வரும் வழியில் ஆக்கிரமிப்புகள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2012 10:04
மதுரை: மதுரை மாநகராட்சியில், கள்ளழகர் வரும் வழியில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு, மாநகராட்சி சார்பில் பணிகள் நடந்து வருகிறது. அழகர் வரும் பகுதியில், பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளன. ஆழ்வார்புரம் பகுதியில் ஏனோதானோவென்று, ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சிக்குட்பட்ட அழகர் வரும் பாதைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றினால், மட்டுமே பக்தர்கள் பயன்பெறுவர். இதற்காக சிறப்புக்குழு நியமிக்க, மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.