காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச விழா கடந்த ஜன.30ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி பிப்.4ல் தங்கரதத்திலும், பிப்.6ல் வெள்ளிரதத்திலும் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நேற்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரில், சண்முகநாத பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார். நான்கு ரத வீதிகளில் தேர் சுற்றி வந்து இரவு 7:00 மணிக்கு நிலையை அடைந்தது. தைப்பூச விழாவையொட்டி, பக்தர்கள் குன்றக்குடிக்கு பாதயாத்திரையாக வந்து சண்முகநாதனை வணங்கினர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.