பதிவு செய்த நாள்
08
பிப்
2020
10:02
தியாகதுருகம்:தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.விழா, நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
நேற்று காலை 4ம் கால யாகசாலை பூஜை முடிந்து மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடாகி மூலவர் விமான கோபுர கலசத்தில் ரமேஷ் குருக்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தார். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு தீபாராதனை நடந்தது.
விழாவில், சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் ரங்கராஜி, மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், ஆரிய வைசிய சங்கத் தலைவர் அபரஞ்சி, அ.தி.மு.க., நகர செயலர் ஷியாம் சுந்தர், வெங்கடேசன், நல்லாப்பிள்ளை, வைகுண்டம், பிச்சாண்டி, சிவபெருமான், மணி, தனபால், ஜெயராமன், பக்கிரி, பூசாரி மணி, மோகன், ரங்கநாதன், கிருஷ்ணா மோட்டார்ஸ் உரிமையாளர் கிருஷ்ணராஜ், அரிமா சங்கத் தலைவர் அரங்க வேல்முருகன், வேல் நம்பி, தனமூர்த்தி ஐ.டி.ஐ., முதல்வர் பழனிவேல், வேலு எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் சிவகுமார், தே.மு.தி.க., அவைத் தலைவர் கோவிமுருகன், வடக்கு ஒன்றிய செயலர் ஜெய்சங்கர், நகர செயலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.