மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு தர்மராஜா திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. மாலை 2ம் கால யாககால பூஜையும், நேற்று காலை 8.30 மணிக்கு கோபூஜை, யாகசாலை பூஜை துவங்கியது. 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:30 மணிக்கு தர்மராஜா திரவுபதி அம்மன் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் சக்கரவர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.