திருமணத்தலங்களில் ஒன்றாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் திகழ்கிறது. இங்குள்ள கல்யாண சுந்தரர் சன்னதி சிறப்பு மிக்கது. இதில் மீனாட்சி நடுவில் இருக்க, வலது புறம் திருமாலும், இடதுபுறம் சொக்கநாதரும் இருப்பர். மணமகளாக மீனாட்சி நாணத்துடனும், மணமகனாக சொக்கநாதர் கம்பீரத்துடனும் காட்சியளிப்பர். மைத்துனர் என்னும் முறையில் திருமால், கெண்டியில் தீர்த்தத்தை சொக்கநாதரின் கையில் தாரை வார்த்தபடி இருப்பார். கல்யாண சுந்தரரை வெள்ளிக்கிழமையில் வழிபடுவோருக்கு திருமணயோகம் கைகூடும்.