பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் பெற்றோர் மீதும், பெற்றோர் அக்குழந்தையின் மீதும் அதிக பாசம் கொண்டிருப்பர். பெற்றோரின் ஆசி பெற்ற குழந்தைகள் நீடுழி வாழ்வர். வடமொழியில் இதை ‘புஷ்யம்’ என்பர். கேரளாவில், பூச நட்சத்திரத்தில் குழந்தைகள் பிறந்தால், அவர்களால் தங்களுக்கும் நல்லது நடக்க விரும்பி வீட்டுக்கு துாக்கிச் சென்று சிறிது நேரம் வைத்திருக்க அண்டை வீட்டார் விரும்புவர். பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்பேர்ப்பட்ட கஷ்டத்தையும் தாங்கும் மனவலிமை இருக்கும்.