தேவையானவை: பச்சரிசி–250 கிராம், உளுந்து–50 கிராம், துவரம் பருப்பு–50 கிராம், வெந்தயம் – சிறிதளவு, தேங்காய்–1/2 முடி, வெல்லம்–1/4 கிலோ, ஏலக்காய் பொடி–சிறிது, உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை: அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும். பின்பு நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும், ஏலக்காய், தேங்காய், வெல்லப்பொடி சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுக்கவும். அரைத்த மாவை 1 வாரம் வரை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். கடாயில் எண்ணெய் காய வைக்கவும். காய்ந்த பின் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து எண்ணெயில் மெதுவாக ஊற்றவும். வெந்த பின், திருப்பி விட்டு அரை நிமிடத்தில் எடுக்கவும். சூடான சுவையான கந்தரப்பம் தயார்.