பழ வகைகளில் பேரீச்சையும், மாதுளையும் நாயகத்திற்கு பிடித்தமானவை. மாதுளையை அதன் உள்தோலுடன் சாப்பிட்டால் அது குடலை வலுப்படுத்தும். பேரீச்சையுடன் தர்ப்பூசணி பழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் ஒன்றின் உஷ்ணம் மற்றதன் குளிர்ச்சியை சமமாக்கி விடும். பேரீச்சம் பழத்துடன், வெள்ளரிக்காயையும் சேர்த்து சாப்பிடலாம். இறைச்சி சமைக்கும் போது அதில் அதிகமாக சுரைக்காயை சேர்க்க வேண்டுமென தன் மனைவி ஆயிஷாவிடம் நாயகம் சொல்வார். ஏனெனில், கவலை நிரம்பிய மனதிற்கு அது புத்துணர்வு ஊட்டுவதாகவும், மருந்தாகவும் இருக்கும் என்கிறார். இலந்தை, திராட்சை, அத்தி ஆகியவையும் சாப்பிட ஏற்ற சத்தான பழங்கள்.