வள்ளியை திருமணம் புரிய விரும்பிய முருகனுக்கு, அண்ணனான விநாயகர் உதவி செய்ய முன்வந்தார். ஒருநாள் தினைப்புனத்தில் காவல் புரிந்த வள்ளியை பயமுறுத்த காட்டுயானை வடிவில் விநாயகர் வந்தார். பயந்தோடிய அவள் முருகனிடம் சரணடைந்தாள். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து திருமணம் முடிந்தது. தமிழ்ப்பாட்டி அவ்வையார் விநாயகர் அகவலைப் பாடி விநாயகரிடம் மோட்சம் வேண்டினாள். உடனே விநாயகரும் துதிக்கையால் அவ்வையாரைக் கைலாயத்தில் கொண்டு சேர்த்தார். ஆக, பக்தன் விரும்புவதை கொடுப்பதில் விநாயகரே முதலிடம் வகிக்கிறார்.