தந்திரமாக பிறருக்கு கேடு செய்வதை குள்ளநரித்தனம் என்பர். உண்மையில் தென்றலுக்கு பயந்து புதருக்குள் ஒளிந்து கொள்ளும் குணம் குள்ளநரிக்கு உண்டு. அதாவது எல்லோருக்கும் பிடிப்பது யாருக்கு பிடிக்கவில்லையோ அவர் குள்ளநரி போல் பதுங்குகிறார் என்பது பொருள். இப்படி ராவணன் சீதையைக் கடத்தியது விபீஷணர் உள்ளிட்ட யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனால் ராவணனுக்கு மட்டும் இந்த செயல் பிடித்தது. இதனால் தான் ராமாயண விமர்சகர்கள் குள்ளநரி ராவணன் என்று குறிப்பிடுவதுண்டு.