தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்பார்கள். இதனை நிலைநாட்டும் விதமாக சிவனே தாயாக அருளும் தலம் திருச்சி. இங்குள்ள சிவன், கர்ப்பிணியான ரத்னாவதி என்பவளுக்கு பிரசவம் பார்க்க தாயின் வடிவில் தோன்றியதால் ‘தாயுமானவர்’ எனப் பெயர் பெற்றார்.
சமஸ்கிருதத்தில், ‘மாத்ருபூதேஸ்வரர்’ என அழைப்பர். திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் இவரை நினைத்தாலே உள்ளம் குளிர்வதாக திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பாடியுள்ளார்.
சாரமா முனிவர் என்பவர் நாகலோகத்தில் உள்ள மலர்களால் தாயுமானவரை பூஜித்து பலன் பெற்றார். சிவனின் 64 வடிவங்களில் ஒன்றான கங்காளமூர்த்திக்கு சன்னதி உள்ளது. அரசுனான திரிசிரன் என்பவன் இங்கு வழிபட்டதால், இவ்வூர் திரிசிரபுரம் என அழைக்கப்பட்டது. பெருமாள் பள்ளி கொள்ள தேர்ந்தெடுத்த தலம் என்பதால் ‛சிராப்பள்ளி’ என்றும் பெயரும் உண்டு. காலப்போக்கில் திருச்சிராப்பள்ளியாகி, திருச்சி என சுருங்கியது.