ஆகலாம் என்கிறார் முதற்கடவுள் விநாயகர். கணபதி, கணேசன், கணாதிபன், கணநாதர், கணநாயகன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. இவை அனைத்திற்கும் ‘கணங்களின் தலைவன்’ என்பது பொருள். அதாவது கைலாயத்திலுள்ள சிவகணங்களின் தலைவர் விநாயகர். மகாகணபதி ஸ்தோத்திரம் என்னும் நுாலில் ‘கண க்ராமணி’ என்னும் பெயரால் விநாயகர் குறிக்கப்படுகிறார். இதற்கு, ‘ ‛கணங்கள் பரிவாரமாக சுற்றி இருக்க நடுவில் இருப்பவர்’ என்பது பொருள். பொதுவாக தலைவராக இருப்பவருக்கு தொண்டர்கள் பணிவிடை செய்வது நடைமுறை. ஆனால் தலைக்கனம் இல்லாதவர் என்பதால் விநாயகர் தனக்குத் தானே காதுகளால் சாமரம் வீசுகிறார். இதனடிப்படையில் ‘சாமர கர்ணர்’ என்றும் பெயருண்டு.