கோயிலில் சிவபெருமானைத் தரிசிப்பதற்கு அனுமதி தருபவர் நந்தீஸ்வரர். ‘சிவ ரகசியம்’ என்னும் ஆகமம் இவரது பெருமையைச் சொல்கிறது. சிவபக்தர்களில் இவரே முதன்மையானவர். சிவனுக்குரிய ஆகமங்கள் அனைத்தும் இவர் மூலமாகவே நமக்குக் கிடைத்தன. நாயன்மார்களுக்கு வரம் தரும் போதெல்லாம் சிவனும், பார்வதியும் நந்தீஸ்வரர் மீது காட்சியளிப்பர். எப்போதும் சிவனை தியானிக்கும் இவரை தர்மத்தின் அடையாளமாக கருதுவர். இவரது கொம்புகளுக்கு இடையே நின்று பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனமாடுகிறார். வெள்ளை மனம் கொண்ட இவரை மகாசிவராத்திரியன்று தரிசித்தால் விரும்பிய வரம் கிடைக்கும்.