‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனை பாடியவர் சுந்தரர். ‘பித்தன்’ என சிவனை அழைக்க காரணம் என்ன தெரியுமா? சுந்தரருக்கு திருமணம் நடக்கவிருந்த நேரத்தில், முதியவர் வடிவில் சிவன் வந்தார். தன் அடிமையான சுந்தரனுக்கு திருமணம் நடத்தக் கூடாது என்று தடுக்க முயன்றார். ‘‘பித்தனே! யார் நீ? என்ன உளறுகிறாய்?” எனக் கோபித்தார் சுந்தரர். பின்னரே வந்திருப்பவர் சிவபெருமான் என்பது புரிந்தது. பாடும்படி சிவன் கேட்க எப்படி ஆரம்பிப்பது என குழம்பினார் சுந்தரர். ‘‘பித்தா எனத் திட்டினாயே! அப்படியே தொடங்கு’’ என்றார். ‘‘பித்தா! பிறைசூடி...’’ என பாடத் தொடங்கினார் சுந்தரர். இப்பாடல் திருவெண்ணெய் நல்லுாரில் வீற்றிருக்கும் சிவன் மீது பாடப்பட்டது.