நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதங்கள் என்கிறோம். பிரபஞ்சம் என்பதற்கு ‘கடவுளுக்கு சம்பந்தமான ஐந்து’ என்பது பொருள் கடவுளே பஞ்சபூதமாக இருக்கிறார் என பிரஸ்ன உபநிஷதம் கூறுகிறது. இயற்கையும் இறைவனும் ஒன்றே என்ற அடிப்படையில் பஞ்சபூத தலங்களை நம் முன்னோர்கள் உருவாக்கினர். அவை நிலம் – காஞ்சிபுரம் அல்லது திருவாரூர் நீர் – திருவானைக்காவல் நெருப்பு – திருவண்ணாமலை காற்று – காளஹஸ்தி ஆகாயம் – சிதம்பரம்