திருக்கனுார் : வாதானுார் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.திருக்கனுார் அடுத்த வாதானுார் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 7ம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது.இதனையொட்டி, காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 9:00 மணிக்கு ஊரணி பொங்கல் நடந்தது. முக்கிய நிகழ்வாக, மதியம் 3:00 மணிக்கு மயான கொள்ளை உற்சவம் மற்றும் அம்மன் வீதியுலா நடந்தது.